சீனாவில் முதியவர் ஒருவர் கண்ணில் இருந்து சுமார் 20 ஒட்டுண்ணிகள் எடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் வான் என்பவருக்கு பல நாட்களாக கண்களில் உருத்தலும் எரிச்சலும் லேசான வலியும் இருந்துவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து முதியவர் வான் கிழக்கு சீனாவின் சுஜோ நகராட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். மருத்துவமனையில் இவரை பரிசோதித்த மருத்துவர்கள், இவரின் கண்களில் ஒட்டுண்ணிகள் எனப்படும் உயிருள்ள புழுக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மருத்துவர். ஜிடிங் தலைமையிலான மருத்துவ குழுவினர் உடனடியாக சிகிச்சை செய்து முதியவரின் வலது கண்ணிலிருந்து உயிருள்ள 20 புழுக்களை நீக்கினர்.
‘தெலாசியா காலிபீடா’ என்று அழைக்கப்படும் ஒரு இனத்தைச் சேர்ந்தவை, இது கண் புழு தொற்று என்றும் அழைக்கப்படுகிறது. அவை பெரும்பாலும் நாய்கள் மற்றும் பூனைகளில் காணப்படுகின்றன, இவை பாதிக்கப்பட்ட ஈக்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்று மருத்துவர் கூறினார். அறுவை சிகிச்சைக்கு பின் சீன மனிதர் குணமடைந்து வருகிறார் என்று மருத்துவர் கூறியுள்ளார்.