பீகார் மாநிலத்தில் லக்ஷ்மன் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய வெளியுறவுத் துறையின் லண்டன் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். அதன் பிறகு சமாஸ்திபூர் பகுதியில் உள்ள இவருடைய வீட்டில் மகள் மற்றும் மருமகன் வசித்து வருகிறார்கள். இந்த வீட்டின் சுவரில் மர்ம நபர்கள் சிலர் 10 லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் இல்லையெனில் உங்கள் குடும்பத்தில் ஒருவர் கொலை செய்யப்படுவார் என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்நிலையத்தில் நோட்டீஸ் ஒட்டியுள்ளது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லக்ஷ்மன் பிரசாத் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 20-ம் தேதி மர்ம நபர்கள் சிலர் லக்ஷ்மன் பிரசாத்தின் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். மேலும் இது தொடர்பாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததாக லக்ஷ்மன் பிரசாத்தின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.