Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!…. 600-ஐ தாண்டிய டெங்கு பாதிப்பு….. மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பாக காசியாபாத் பகுதியில் 600-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து காசியாபாத் உதவி தலைமை மருத்துவ அதிகாரி ராகேஷ் குப்தா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் டெங்கு நோயால் பாதிக்கப் படுபவர்களுக்காக தனியாக படுக்கைகள் ஒதுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய அன்றாட பணிகள் மற்றும் வேலைக்காக டெல்லிக்கு வந்து செல்கிறார்கள். டெல்லிக்கு வரும் மக்களை பரிசோதனை செய்வதில் தினந்தோறும் 10 முதல் 15 பேர் வரை டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அதன் பிறகு தலைநகரை ஒட்டியுள்ள பெரும்பாலான பகுதிகளில் டெங்கு நோயாளிகள் இருப்பது தெரியவந்துள்ளது.  இந்த டெங்கு காய்ச்சல் அதிகரிப்பதற்கான காரணம் மக்கள் மருத்துவ மனையில் வந்து சிகிச்சை பெறாதது தான். மேலும் சுத்தமான தண்ணீரில் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தி ஆவதால் மக்கள் தங்கள் வீடுகளை சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காத அளவுக்கு பார்த்து கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Categories

Tech |