தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவரின் தந்தையான நடிகர் கிருஷ்ணா திரை வாழ்க்கையில் 300 க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக 2016 ஆம் ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ படம் வெளியானது.
இதனய டுத்து பழம்பெரும் நடிகருமான இவரின் தந்தையுமான கிருஷ்ணாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் செய்த பின்னர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு ரசிகர்கள் பலரும் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.