பிரபலமான இயக்குனர் ராம் கோபால் வர்மா. இவர் ரங்கீலா, நடிகர் அமிதாப் பச்சனின் சர்க்கார், நடிகர் சூர்யாவின் ரத்த சரித்ரா போன்ற படங்களை இயக்கியுள்ளார். பல நல்ல படங்களை இயக்கிய ராம் கோபால் வர்மா சமீப காலமாகவே நேக்கட், கிளைமேக்ஸ், காட் செக்ஸ் ட்ரூத் என கவர்ச்சிகரமான படங்களை இயக்கி வருகிறார். இவர் தற்போது லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த கவர்ச்சி படத்தில் அப்சரா ராணி மற்றும் நைனா கங்குலி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், ராம்கோபால் வர்மா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் ராம் கோபால் வர்மா வெளியிட்ட ஒரு வீடியோ தற்போது இணையதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஆஷு ரெட்டியின் காலுக்கடியில் உட்கார்ந்து ராம் கோபால் வர்மா பேட்டி எடுக்கிறார். அப்போது நடிகைகளின் கால்களை ராம்கோபால் வர்மா மசாஜ் செய்து கொண்டே, நடிகையின் உடலில் ஆபத்தான குறியீடு என்ன என்று கேட்டுவிட்டு கேமராவை பார்க்கிறார். அதன்பின் திடீரென நடிகையின் கால்களை பிடித்து கடிக்கிறார். இந்த வீடியோ மிகவும் ஆபாசமான முறையில் இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் கூறி வருகிறார்கள். மேலும் இந்த வீடியோவுக்கு பலரும் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.