ஆர்.என்.ஆர் மனோகர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் பணியாற்றியவர் ஆர்.என்.ஆர் மனோகர். இவர் இயக்கத்தில் மாசிலாமணி, வேலூர் மாவட்டம் ஆகிய திரைப்படங்கள் வெளியானது .
மேலும், இவர் ஈட்டி, கைதி, மிருதன் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.