கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு விந்தணு குறைபாடு ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இதையடுத்து ஒரு சில தடுப்பு மருந்துகள் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மூக்கு மற்றும் தொண்டை உள்ளிட்ட மேல் சுவாசக்குழாயில் இருக்கும்போது மட்டுமே கட்டுப்படுத்தப்படும். கீழ் சுவாசக்குழாய்களை தாக்கும் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர நுரையீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றிலும்ம் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் இரத்த நாளங்களில் படையெடுத்து சென்று அங்கு வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதன் மூலம் மாரடைப்பு ஏற்படலாம் என்று நாள்தோறும் ஒவ்வொரு தகவல்கள் கொரோனா குறித்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கொரோனா பதித்த ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜெர்மனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பாதிப்படைந்த ஆண்களின் 84 பேருக்கு இந்த சோதனை 60 நாட்களுக்கு 10 நாட்கள் இடைவெளியில் பகுப்பாய்வு செய்து பார்த்த போது அவர்களுடைய விந்து செல்களில் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் அதிகரித்துக் காணப்பட்டுள்ளது.
அதிக உடம்பு சூட்டின் காரணமாக விந்தணு உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆண்மை குறைவு கடுமையான காய்ச்சலுடன் தொடர்புடையது. எனவே கொரோனாவால் காய்ச்சல் ஏற்படுதல் இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே கொரோனா பாதித்த ஆண்கள் குழந்தை பெற முயற்சிக்கும் போது அவர்களுடைய இனப்பெருக்க ஆரோக்கியம் பற்றி பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.