சர்வதேச அளவில் அதிக வெப்ப அலைகளை சந்திக்கும் நாடுகள் குறித்து உலக வங்கி ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் சில வருடங்கள் ஆக வெப்பநிலை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் குறிப்பாக தலைநகர் டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் 144 டிகிரி பாரன்ஹீட் வெப்பமானது பதிவாகியுள்ளது. இதேபோன்று இந்தியாவின் சில முக்கிய நகரங்களிலும் வெப்பம் அதிக அளவில் பதிவாகியுள்ளது.
அதோடு வெப்பத்தின் தாக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருப்பதையும் ஆய்வில் உலக வங்கி உறுதிப்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் 75% தொழிலாளர்கள் வெப்பம் சார்ந்த தொழிலையே நம்பி இருப்பதால் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து செல்வது நாட்டின் தொழில் வளர்ச்சியை பாதிக்கும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. மேலும் இதே நிலை தொடர்ந்து நீடித்தால் உலக அளவில் அதிக வெப்பநிலையை சந்திக்கும் நாடாக இந்தியா தான் இருக்கும் என்று உலக வங்கி தன் ஆய்வில் தெரிவித்துள்ளது.