Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – தாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 391 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 320 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த மாவட்டங்களில் செங்கல்பட்டு 4ம் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 11ம் தேதி கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தில் உள்ள 6 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் தாம்பரம் ரங்கநாதன் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கோயம்பேடு சந்தையில் இருந்து காய்கறிகளை ஏற்றி வரும் வேலையை செய்து வந்தார். தம்பரத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கொரோனா சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்பதால் கடந்த சனிக்கிழமை முதல் அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர்.

இதனை தொடந்து நடத்திய சோதனையில் ரங்கநாதன் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர் 2 குழந்தைகள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் நேற்று ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சிந்தையுடன் தொடர்புடையவர்கள். தாம்பரத்தில் ஏராளமான நபர்களுக்கு இன்னும் பரிசோதனைகள் செய்யவில்லை என்பதால் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |