Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி தகவல் – இந்தியாவில் ஊரடங்கு இல்லாதிருந்தால் 73,000 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்!

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்காமல் இல்லாதிருந்தால் 73,000 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என அதிர்ச்சி தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,077ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 490 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,078 பேர் குணமடைந்துளளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருவோர் விகிதம் 20.57% ஆக உள்ளது.

28 நாட்கள் 15 மாவட்டங்களிலும், 14 நாட்கள் 80 மாவட்டங்களில் இல்லை என்று உள்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் சமூக பரவல் ஏற்படவில்லை, இந்தியாவில் கொரோனா பரவல் மூன்றாம் நிலைக்கு செல்லவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 6,430, குஜராத்தில் 2,624, டெல்லியில் 2,376, ராஜஸ்தானில் 1,964, மத்திய பிரதேசத்தில் 1,699 மற்றும் தமிழ்நாட்டில் 1,683 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்காமல் இருந்திருந்தால் 73,000 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என உள்துறை இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த சென்னை, அகமதாபாத், சூரத், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சக குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |