Categories
சென்னை மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – சென்னையில் அம்மா உணவக பணியாளர் ஒருவருக்கு கொரானா தொற்று உறுதி!

சென்னையில் அம்மா உணவக பெண் பணியாளருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கோரோனோ வைரஸ் பாதித்தவர்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,023ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,460ஆக அதிகரித்துள்ளது. திரு.வி.க நகர், ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை , கோடம்பாக்கம் , அண்ணா நகர் என இந்த ஆறு மண்டலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திரு.வி.க. மண்டலத்தில் மொத்தமாக 324 பேர் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ராயபுரத்தில் 275 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தேனாம்பேட்டை – 166, தண்டையார்பேட்டை- 118 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் திருவொற்றியூர் – 22, மணலி – 5, மாதவரம் – 9, அம்பத்தூர் – 58, அண்ணாநகர் – 130, கோடம்பாக்கம் – 199, வளசரவாக்கம் – 92, ஆலந்தூர் – 10, அடையாறு – 29, பெருங்குடி – 10, சோளிங்கநல்லூர் – 6, மற்ற மாவட்டம் – 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை ஐஸ் ஹவுஸில் உள்ள அம்மா உணவகத்தில் பணியாற்றிய திருவல்லிக்கேணியை சேர்ந்த 52 வயது பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவல்லிக்கேணி வெங்கடேசன் தெருவில் வசித்து வந்த அந்தப்பெண் ஐஸ்அவுஸ் பகுதி கஜபதி தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் கோயம்பேடு சந்தை கொரோனா பரவும் கூடாரமாக மாறியுள்ளது. தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தொடர்புடைய 220 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Categories

Tech |