திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் ஒரே கடையில் பணிபுரிந்து வந்த 17 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் நேற்று வரை 1,624 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 616 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 999 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 9 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் ஒரே கடையில் பணிபுரிந்து வந்த 17 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திருவண்ணாமலையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 1,641ஆக உயர்ந்துள்ளது.