சென்னையில் இன்று ஒரே நாளில் புதிதாக 599 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் நேற்று புதிதாக 624 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 9,989 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இந்த நிலையில் இன்று புதிதாக 599 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இன்று மாலை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவுள்ளது. இதனால் சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 10,000ஐ தாண்டியுள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,889 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகரை தொடர்ந்து தேனாம்பேட்டை மண்டலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் அங்கு எந்த தளர்வுகளும் வழங்கவில்லை. இந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மே 31ம் தேதிக்கு பின்னர் கூட தளர்வுகள் வழங்க வாய்பில்லாத சூழல் நிலவுகிறது.