Categories
சென்னை மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல்…. சென்னையில் அனைத்து மண்டலங்களுக்கு பரவிய கொரோனா; 373பேர் பாதிப்பு!

சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 662ஆக உள்ளது. சென்னையில் புதிதாக 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 373ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 117 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. தண்டையார்ப்பேட்டை – 46 பேர், திருவிக நகர் – 45 பேர், தேனாம்பேட்டை – 44 பேர், கோடம்பாக்கதம் – 36 பேர், அண்ணாநகர் – 32 பேர், திருவொற்றியூர் – 13 பேர், வளசரவாக்கம் – 10 பேர்,பெருங்குடி – 8 பேர், ஆலந்தூர் மற்றும் அடையார்- தலா 7 பேர், மாதவரம் – 3 பேர், சோழிங்கநல்லூர் – 2 பேர், அம்பத்தூர் – 1 நபர் மற்றும் மணலி – 1 நபரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அம்பத்தூரை தொடர்ந்து கடைசியாக 15 ஆவது மண்டலமாக மணலியிலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கரூரில் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். திண்டுக்கல்லை சேந்த 11 பேர், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |