சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 11 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரம் விளக்கு பகுதியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது மூதாட்டி, சூளைமேட்டு பகுதியை சேர்ந்த 45 வயது ஆண் ஒருவரும் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர்.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர், ஜாம்பஜாரை சேர்ந்த 60 வயது மூதாட்டி, திருவல்லிகேணியை சேர்ந்த முதியவர் உயிரிழந்துள்ளார். கேஎம்சி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா நோயாளி 2 பேர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனோவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனோவால் நேற்று மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 269ஆக உயர்ந்துள்ளது.