Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் : தமிழகத்தில் பிறந்து 2 வாரமே ஆன குழந்தை உட்பட 3 குழந்தைக்கு இன்று கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் பிறந்து 2 வாரமே ஆன பெண் குழந்தை உட்பட 3 குழந்தைக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,757ஆக உயர்ந்துள்ளது. சென்னை – 1,257, கோவை – 142, செங்கல்பட்டு – 90, திருப்பூர் – 114 , திருவள்ளூர் – 68, மதுரை – 88, விழுப்புரம் – 53, காஞ்சிபுரம் – 41, தேனி – 44 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் – 33, கடலூர் – 30ம் அரியலூர் – 26, ராமநாதபுரம் – 20, பெரம்பலூர் -11 பேருக்கும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பாதிக்கப்பட்ட பேரில் ஆண்கள் – 158 பேர், பெண்கள் 72 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் முதல்முறையாக திருநங்கை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பிறந்து 2 வாரமே ஆன பெண் குழந்தை, 4 வயது ஆண் குழந்தை, மூன்றரை வயது ஆண் குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 29 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,341 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 46.64% குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாக தொடர்கிறது. சென்னை உட்பட 12 மாவட்டங்கள் சிவப்பு மணடலங்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |