Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி.! நம்பர் ஒன் ஆன கோடம்பாக்கம்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை  தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 316 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 2,644 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கோயம்பேடு சந்தையின் மூலமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. கொரோனாவின் பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்டதாக நினைத்து கொண்டிருந்த தமிழக மக்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகபட்சமாக 461 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்கள் மாறி மாறி முதலிடத்தில் இருந்த நிலையில், கோடம்பாக்கம் தற்போது முதலிடத்தில் உள்ளது.

சென்னை மண்டல விவரம்: 

திரு.வி.க நகரில் – 448,
ராயபுரம் – 422,
அண்ணா நகர் – 206,
தேனாம்பேட்டை – 316,
தண்டையார் பேட்டை – 184,
வளசரவாக்கம்- 205,
அம்பத்தூர் – 105,
அடையாறு- 107,
திருவொற்றியூர் – 43,
ஆலந்தூர் -16,
பெருங்குடி – 22,
மாதவரம் – 33,
சோழிங்கநல்லூர் – 15,
மணலி – 14 பேரும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |