Categories
இந்திய சினிமா சினிமா

அதிர்ச்சி!…. பழம் பெரும் பிரபல நடிகை திடீர் மரணம்….. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல்….!!!

பழம்பெரும் பஞ்சாபி நடிகை ‌தல்ஜீத் கவுர்‌ கங்குரா. இவர் 1970 மற்றும் 1980-களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார். இவர் தாஜ் கித்தா, புட் ஹட்டன் தே, இஷாக் நிமானா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவருடைய கணவர் ஹர்மிந்தர் சிங் தயோலை விபத்தில் உயிரிழந்த பிறகு நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டு சினிமாவை விட்டு விலகினார்.

இந்நிலையில் 69 வயதாகும் தல்ஜீத பல காலமாக உடல்நல குறைவின் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், திடீரென மரணம் அடைந்தார். இவருடைய மரணம் பஞ்சாபி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகையின் மரணத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |