Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி! 250க்கும் மேற்பட்ட நாய்கள் பலி…. கொடிய வைரஸ் தான் காரணம்…. வெளியான தகவல்…!!

250க்கும் மேற்பட்ட நாய்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பங்குரா அடுத்த பிஷ்ணுபூரில் கடந்த மூன்று தினங்களில் 250க்கும் மேற்பட்ட நாய்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. அனைத்து நாய்களுக்கும் வயிற்றுப்போக்கு, வாந்தி ,இரத்தத்துடன் கூடிய இருமல் ஆகிய ஒரே மாதிரியாக அறிகுறிகள் இருந்ததாக அந்த பகுதியில் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நகருக்கு வெளியே உள்ள மயானம் அருகே இந்த நாய்களை புதைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாய்களின் தொடர் மரணம் குறித்து தகவல் அறிந்த கால்நடை மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  நாய்களின் இறப்பிற்கு பர்வோ வைரஸாக  காரணமாக இருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மலத்தின் மூலம் இந்த வைரஸ் பரவக்கூடியது. பல வருடங்களாக இந்த வைரஸ் பாதிப்பு இருக்கிறது. ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் நாய்களை இந்த வைரஸ் தாக்கி வருகிறது. இதனால் ஏராளமான நாய்கள் உயிர் இழக்கும் நிலையில் இருக்கின்றன. அங்குள்ள நகராட்சித் தலைவர் இது குறித்து கூறுகையில், “சம்பந்தப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட மற்றும் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளோம். மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விஷயங்கள் மேற்கொண்டோம். மேலும் இந்த வைரஸ் காற்றின் மூலம் பரவாது” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |