கொரோனாவை காட்டிலும் கொடிய உயிர்கொல்லி நோய் பரவ வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவி ஒரு வருடம் முடிந்த நிலையில், கொரோனாவை காட்டிலும் கொடூரமான ஒரு கொள்ளை நோய் பரவ வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த கேண்டிடா அவுரிஷ் எனப்படும் இந்த கொடிய வைரஸ் கருப்பு பிளேக் நோய் போன்று இருப்பதாகவும், இது கொரோனாவை விட விட கொடிய கொள்ளை நோயை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு தடுப்பு மைய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட நபரின் ரத்த நாளங்களுக்குள் இந்த பூஞ்சை ஊடுருவி விடுவதால் உயிருக்கு ஆபத்து வரும் என்று கூறுகின்றனர். மேலும் மருத்துவமனையில் உள்ள ஆபரணங்கள் வாயிலாகவே இந்த பூஞ்சை பரவுவது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மருத்துவமனை உபகரணங்களில் இந்த பூஞ்சை தொற்று பரவினால் சாதாரண நிலையைவிட மிகவும் கொடிய உயிர் கொல்லி ஆக மாறும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பூஞ்சை முதன்முதலாக 2009ஆம் ஆண்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது.