மலையாள திரை உலகில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் கே.பி.சஷி (64). இவர் உடல்நல குறைவின் காரணமாக திருச்சூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் திடீரென கே.பி சஷி இன்று காலை மரணம் அடைந்துள்ளார். இவருடைய மரணம் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1994-ம் ஆண்டு வெளியான இலையும் முள்ளும் என்ற பிரபலமானவர் கே.பி சஷி.
இப்படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இவர் பாலிவுட் சினிமாவில் ஏக் அலக் மௌசம் என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். மேலும் புகழ்பெற்ற பல ஆவண படங்களையும் கே.பி. சஷி இயக்கியுள்ளார். இவருடைய மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.