யானைகள் உட்பட சுமார் ஒரு மில்லியன் இனங்கள் அடுத்த 10 வருடத்திற்குள் அழிந்து போவதற்கு வாய்ப்புள்ளதாக இயற்கைக்கான உலகளாவிய நிதியம் தெரிவித்துள்ளது.
இயற்கைக்கான உலகளாவிய நிதியம் மிகவும் ஷாக்கான தகவல் ஒன்றை ஆய்வறிக்கையின் மூலம் வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த 10 வருடத்திற்குள் யானைகள் உட்பட சுமார் ஒரு மில்லியன் இனங்கள் அழிந்து போவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் பனிக்கரடிகள், சுறாக்கள் போன்ற 40,000 இனங்கள் அழிவு பாதையின் நுனியில் இருப்பதாகவும் இயற்கைக்கான உலகளாவிய நிதியம் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமின்றி அண்டார்டிக்கா முழுவதும் வருகின்ற 2035ஆம் ஆண்டின் கோடையில் பனியின்றி காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.