Categories
மாநில செய்திகள்

SHOCK NEWS: அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில்….. இவர்களுக்கு சீட் இல்லை….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் முதலாம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஒருங்கிணைந்த ஆன்லைன் கவுன்சிலிங்கை தமிழக உயர்கல்வித் துறை சார்பில் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்தி வருகிறது. இந்த கவுன்சிலிங்கில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை வளாக கல்லூரிகளில் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 8 இடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடங்களும், விளையாட்டு வீரர்களுக்கு 12 இடங்களும் ஒதுக்கப்படுகின்றன.

இந்த நிலையில் அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவில் படித்த மாணவர்களுக்கு இந்த வருடம் இடம் ஒதுக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். அரசு பள்ளிகளில் ஆனால் தொழிற்கல்வி பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இடங்கள் ஒதுக்கப்பட வில்லை. இந்த வருடத்திற்கான கவுன்சிலிங் விதிகளில் அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைகழகத்தில் இடங்கள் ஒதுக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 100 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 4 சதவீத இடங்கள் மட்டுமே தொழிற்கல்வி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுப் பள்ளி தொழிற்கல்வி மாணவர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |