-ரே-ஷன் கார்டுதாரர்கள் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு ரேஷன் வாங்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டில் தற்போது புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. அதாவது, ரேஷன் கார்டு வைத்திருந்தும் அதைப் பயன்படுத்தாமல் இருந்தால் அந்த ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். இந்த நடவடிக்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்த விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. அதாவது, தொடர்ந்து 6 மாதங்கள் மற்றும் அதற்கு மேல் ரேஷன் கார்டைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் கார்டுதாரர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். அவர்களுக்குப் பதிலாக, தகுதியுடைய பிறர் பயன்பெறும் வகையில் இந்த விதிமுறை வந்துள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இந்த விதிமுறை இன்னும் அமலுக்கு வரவில்லை.