இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதாக உலக வானிலை நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் இந்த வருடம் இந்தியாவில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையமும் ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் எப்போதும் வழக்கமாக மே மற்றும் ஜூன் மாதங்களில் வெப்ப அலை வீசும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது. கடந்த 120 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மார்ச் மாதத்தின் சராசரி வெப்பநிலை அதிகரித்துள்ளது.
மே மாதமும் இது தொடர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 45 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது தொடர்பாக உலக வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக 45 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. அதிலும் குறிப்பிட்ட இடங்களில் 50 டிகிரி செல்சியஸ் நெருங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது.
#India and #Pakistan have been gripped by intense heat since March. Temperatures in the past few days have been well above 45°C (113°F) and, in some parts, closer to 50°C (122°F), per @Indiametdept and @pmdgov
We are working to expand heat-health action plans to save lives pic.twitter.com/VVTWpV9U8z— World Meteorological Organization (@WMO) May 16, 2022