Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: இனி ரேஷன் வாங்க முடியாது…. ரேஷன் கார்டுகள் ரத்து?…. மத்திய அரசு புதிய அதிரடி….!!!!

நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக அனைவருக்கும் உணவு தானியங்கள் இலவசமாகவும் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அவருக்காக தகுதியின் அடிப்படையில் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் மட்டுமே இந்த உதவிகளை பெற முடியும். ஆனால் ரேஷன் அட்டை வைத்திருக்கும் நிறைய பேர் இந்த சலுகைகளை பெறுவதில்லை.அதனைப்போலவே மலிவு விலையில் உணவுப் பொருள்களை வாங்கி அவற்றை கள்ள சந்தையில் விற்பனை செய்யும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் தகுதி உடையவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் போவதையும்,தகுதியற்றவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதை தடுக்கும் நோக்கத்தில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ரேஷன் கார்டு விதிமுறைகள் மாற்றப்பட உள்ளன. இந்த புதிய விதிமுறைகளின்படி ரேஷன்கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் இனி ரேஷன் உதவி கிடைக்காது. அதனைப் போலவே நிறைய பேரின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கும் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய மக்களுக்கு உதவுவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். அதனால் அதிக வசதி படைத்தவர்கள் இந்த சலுகைகளை பயன்படுத்த முடியாது. அதன்படி பல்வேறு வரையறை களின் அடிப்படையில் ரேஷன் கார்டு வைத்திருப்போரின் குடும்ப வருமானம் மற்றும் வசதி போன்றவற்றை வைத்து தகுதி உடையவர்கள் மட்டும் இனி ரேஷன் பொருட்களை வாங்க முடியும்.

ஆனால் இதற்கான விதிமுறைகளும் அதற்கான அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்த விதிமுறைகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தபிறகு தகுதியற்றவர்கள் இன் ரேஷன் கார்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது முதல் ஒவ்வொரு மாநிலமாக அமல் படுத்தி வருகின்றது.

இதில் முதல் கட்டமாக தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்கள் ஒன்றிணைந்தன. இறுதியாக அசாம் மாநிலம் அமல்படுத்தி விட்டது. விரைவில் நாடு முழுவதும் புதிய விதிமுறைகளுடன் கூடிய இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் ரேஷன் அட்டை வைத்து மோசடி செய்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |