ரஷ்யா உலக நாடுகளுக்கு பயம் காட்டும் விதமாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலையானது கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இதையடுத்து ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலையானது 2.94 டாலர்கள் உயர்ந்து $83.72-ஆக விற்பனை ஆகி வருகிறது.
கடந்த மாதம் பெட்ரோல் விலை 80 டாலர்களை நெருங்கிய நிலையில், ரஷ்யாவின் அறிவிப்பால் மீண்டும் உயரத்தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் இந்த அறிவிப்பால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.