தமிழகத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையை உயர்த்துவதற்காக முதல்வர் ஸ்டாலின் விரைவில் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பால் ரூ.3 குறைக்கப்பட்டது. இதன் மூலம் நாள் ஆண்டுக்கு ரூபாய் 250 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர் என்று கூறியுள்ளார். இதனால் பால் விலை உயர்ந்து விடுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.