Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: சிமெண்ட் விலை அதிரடி உயர்வு…. புதிய ரேட் இதுதான்…. மக்களுக்கு அதிர்ச்சி செய்தி….!!!!

இந்தியாவில் சிமெண்ட்ஸ் நிறுவனம் சிமெண்ட் விலையை மூட்டை ஒன்றுக்கு 55 ரூபாய் உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த விலை உயர்வை ஒரே அடியாக இருக்காது என்றும் மூன்று கட்டங்களாக விலையை உயர்த்த திட்டமிட்டு உள்ளதாகவும் கூறியுள்ளது. சிமெண்ட் விலை உயர்வதற்கு முக்கிய காரணம் உற்பத்தி செலவுகள் அதிகரிப்பது தான். ஏற்கனவே வீடு கட்டுவதற்கான செலவுகள் அதிகமாக இருக்கும் நிலையில் சிமெண்ட் விலையும் தற்போது உயர்வது வீடு கட்டுவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சிமெண்ட் விலை ஜூன் 1-ஆம் தேதி 20 ரூபாயும், ஜூன் 15ஆம் தேதி 15 ரூபாயும், ஜூலை 1ஆம் தேதி 20 ரூபாயும் உயர்த்தப்படுகிறது. ஒரு சிமெண்ட் மூட்டையின் விலை தற்போது 320 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை உள்ளது. மேலும் தமிழ்நாடு சிமெண்ட் கழகம் சார்பில் விற்பனை செய்யப்படும் சிமெண்ட் விலை ஒரு மூட்டை 350 ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |