Categories
மாநில செய்திகள்

SHOCK NEWS: சென்னையில் 15 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகள்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகம், கேரளா உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனிடையே மும்பை, பெங்களூர் மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகம் எடுத்து வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள தமிழகம், கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் மோஷன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் சுகாதாரத் துறை செயலாளர்களுக்கு முக்கிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதாவது சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிக்கின்றது.

இதனை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும். இதற்கு மாநில அரசுகளின் முழு ஒத்துழைப்பும் தேவை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி அவர் கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் 15 பகுதிகள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்படுவது சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதையடுத்து கொரோனா அதிகரிக்கும் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மக்கள் அனைவரும் கொரோனா  கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |