ஐசிஐசிஐ வங்கி சேவை கட்டணங்களில் சில மாற்றங்களை கொண்டுவர உள்ளது.
அவை என்னவென்றால், ஏடிஎம் பணப்பரிவர்த்தனைகளுக்கான சேவைக் கட்டணங்களை உயர்த்த உள்ளன. ஐசிஐசிஐ ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும்போது, முதல் 5 முறை பண பரிவர்த்தனைகளுக்கு எந்தவிதக் கட்டணமும் கிடையாது. ஆனால் அதற்குப் பின்னர் பணம் எடுக்கும் போது ஒவ்வொரு முறையும் 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.
2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்த கட்டணம் 21 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போன்று ஐசிஐசிஐ வங்கி அல்லாத இதர வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் இருந்து முதல் 3 முறை பணம் எடுப்பதற்கு எந்தவித கட்டணமும் கிடையாது. இவை சென்னை ஹைதராபாத், மும்பை, பெங்களூர், கொல்கத்தா மற்றும் டெல்லி மெட்ரோ களில் மட்டுமே பொருந்தும். மற்ற இடங்களில் 5 முறை பணம் எடுப்பதற்கு எந்தவித கட்டணமும் கிடையாது.
இதையடுத்து பணம் எடுக்கும்போது 20 ரூபாய் சேவை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் ஜனவரி 1-ஆம் தேதி முதல் சேவை கட்டணமாக ரூபாய் 21 ரூ செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிதிசாரா பணபரிவர்த்தனைகளுக்கான இருப்புத் தொகையை பார்ப்பதற்கு, மினி ஸ்டேட்மெண்ட்களை பெறுவதற்கு, பின் எண்ணை மாற்றுவதற்கு எந்த கட்டணங்களும் கிடையாது. இந்த புதிய மாற்றம் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வர இருக்கிறது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.