நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலலை கட்டுப்படுத்த ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. 2-வது அலையின் உச்சத்தில் அதிக பாதிப்புகளை மராட்டிய மாநிலம் சந்தித்தது. அதன் பின்னர் நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகின்றன.
இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இது பற்றி மராட்டிய சுகாதாரத் துறையின் கூடுதல் முதன்மை செயலாளர் டாக்டர் பிராதாப் வியாஸ் கூறுகையில், மராட்டியத்தில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்புகளின் அடிப்படையில் வருகிற 3-து வாரத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 2 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிலரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள தனியாக அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன என தெரிவித்துள்ளார்.