நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரியை கணிசமாக குறைத்த நிலையில் மாநில அரசுகளும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஓராண்டுக்கு முன்பே குறைத்து விட்டதால் இனி குறைக்க முடியாது என்று திட்டவட்டமாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல மடங்கு விலை உயர்த்தி விட்டு சிறிதளவு மத்திய அரசு குறைத்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மேலும் குறைத்து மத்திய அரசு விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.