Categories
மாநில செய்திகள்

Shock news: தமிழகத்தில் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்?….அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?….!!!!

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலையின் தாக்கமானது கடந்த  ஜனவரி மாத இறுதியில் இருந்து குறையத் தொடங்கி வருகிறது. இதனையடுத்து பிப்ரவரி மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் கொரோனாவின் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி திறக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பொதுத்தேர்விற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக செய்து வருகிறது. இதையடுத்து 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொது தேர்வானது இந்த  மாதம் 5-ஆம் தேதி முதல் தொடங்கி,  மாத இறுதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலையின் காரணமாக 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து வேலூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை வெயிலானது, சுமார் 100 டிகிரி பாரன்ஹீட் என்ற நிலையில் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் நடப்பு கல்வி ஆண்டில், தமிழகத்தில் வருகிற 13-ஆம் தேதி கடைசி வேலை நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், வெப்ப அலையின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அறிவிப்பானது வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |