Categories
மாநில செய்திகள்

SHOCK NEWS: தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. அரசு வைத்த அதிரடி செக்…..!!!!!

தமிழகத்தில் இயங்கி வரும் ரேஷன் கடைகள் வாயிலாக அரசு, மக்களுக்கு சிறப்பான திட்டங்களை செய்து வருகிறது. கடந்த வருடம் ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்ற கழகமும் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 வழங்க உள்ளதாக அவர்களின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தனர். அதுமட்டுமல்லாமல் இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளதாக அரசின் சார்பாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ரேஷன் கடைகளில் உள்ள போலி அட்டைகளை கண்டுபிடிக்க உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் ராஜாராம், துணை ஆணையர், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், போலி குடும்ப அட்டைகளை கண்டறிய பின் வரும் அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது பொதுவாக பிராக்ஸி முறை பரிவர்த்தனையானது அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழின் அடிப்படையில் மட்டும் தான் நடைபெறும். அவற்றிற்கு தனியாக பதிவேடு அந்தந்த ரேஷன் கடைகளில் பராமரிப்பதை உறுதிபடுத்தி கொள்ள வேண்டும். அங்கீகார சான்று இல்லாமல் பிராக்ஸி முறையில் பரிவர்த்தனைகள் ஏதும் மேற்கொள்ளப்பட்டு இருந்தால், சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரரால் அல்லது குடும்ப உறுப்பினரால் பொருள் பெற்று கொண்டதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர் அத்தியாவசியப் பொருட்கள் பெறப்படவில்லை என்று உறுதியாக தெரியும் நேரத்தில் ரேஷன் கடை பணியாளர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஒரு ரேஷன் கார்டை பயன்படுத்தி குறிப்பாக 2 அல்லது 3 மாதங்கள் மேல் அத்தியாவசியப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டை விவரங்களை பொது விநியோகத் திட்ட தரவுத் தொகுப்பில் இருந்து பெற்றுக், குடும்ப அட்டைதாரர்கள் அவர்கள் குறிப்பிட்ட முகவரியில் தான் வசிக்கிறார்கள் என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். பின் ஒரு குடும்பத்தில் ஒரு நபர் இறந்து விட்டால் அவரின் பெயரை உடனடியாக நீக்கவேண்டும். அவ்வாறு நீக்காமல் அந்த குடும்ப அட்டைக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு கொண்டிருத்தால் இந்த குடும்ப அட்டையை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஆகவே மேற்குறிப்பிட்ட அறிவுரைகளை சரியாக முறையில் செயல்படுத்தி போலி குடும்ப அட்டைகளை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போலி குடும்ப அட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டு அந்த குடும்ப அட்டைகளை குடும்ப அட்டை தரவுத் தொகுப்பில் இருந்து நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |