Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: தவறுதலாக செலுத்தப்பட்ட ரத்தம்…. 4 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு…. 1 குழந்தை பலி….!!!!

மகாராஷ்டிராவில் தலசீமியா என்ற ரத்த சோகையால் பாதிக்கப் பட்ட நான்கு குழந்தைகளுக்கு ரத்த மாற்று சிகிச்சை தேவைப்பட்டது. அதற்காக அங்கிருந்த ரத்த வங்கியில் இருந்து ரத்தம் பெறப்பட்டு 4 குழந்தைகளுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் பரிசோதனை செய்யாமல் தவறுதலாக ரத்தம் செலுத்தியதில் 4 குழந்தைகளுக்கும் எச்ஐவி பரவியுள்ளது. அதில் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என சுகாதாரத்துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். பொதுவாக குழந்தைகளுக்கு சிகிச்சைக்காக ரத்தம் செலுத்துவதற்கு முன் வந்த ரத்தம் NTA பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால் ரத்த வங்கியில் இந்த பரிசோதனை வசதி இல்லாத காரணத்தால் குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |