Categories
அரசியல் மாநில செய்திகள்

Shock News: துணை முதல்வர் OPSக்கு கொலை மிரட்டல்…!!!

தேனியில் நடந்த திமுக மக்கள் கிராம சபை கூட்டத்தில் பெண் ஒருவர் துணை முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கிராமசபை கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்த போதிலும், திமுக தலைவர் ஸ்டாலின் தடைகளை மீறி கிராம சபை கூட்டம் நடத்தி வருகிறார்.

அதன்படி நேற்று ஸ்டாலின் தலைமையில் தேனியில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் லட்சுமி என்ற பெண், துணை முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கும் தோணியில் ஆவேசமாக பேசியது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது அந்தப் பெண் பேசியது தவறு என எடுத்துக் கூறிய ஸ்டாலின் அந்த பெண் பேசிய வார்த்தைகளை வாபஸ் வாங்க வைத்தார்.

Categories

Tech |