சென்னையில் 126 வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40, டீசல் ஒரு லிட்டர் ரூ.91.43- க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 130 அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்ந்தது. தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருப்பதாக யாரும் எண்ணிவிட வேண்டாம்.
இன்று உத்திரப்பிரதேசம், மணிப்பூர், உத்திரகாண்ட், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியது. இதன்பிறகு நாளை முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 10 ரூபாய் வரை உயரக்கூடும் என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி தரும் தகவலாக அமைந்துள்ளது.