ராஜஸ்தான் மாநிலம் டவுசா என்ற மாவட்டத்தில் வீட்டின் அருகே உள்ள பள்ளியில் மாணவி ஒருவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவரை கடந்த புதன்கிழமை வழக்கம்போல தந்தை பள்ளியில் விட்டு விட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் மாணவி அருகில் உள்ள நெட் சென்டரில் பிரிண்ட் அவுட் எடுப்பதற்காக சென்று மீண்டும் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் மாணவியை வலுக்கட்டாயமாக வாகனத்தில் தூக்கிக் கொண்டு டெல்லி -மும்பை நெடுஞ்சாலையில் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு இருந்த ஒரு கட்டிடத்தில் வைத்து மாணவிக்கு மது கலந்து கூல்ட்ரிங்க்ஸ் குடிக்க வைத்துள்ளனர். அதனால் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்த மாணவியை இளைஞர்கள் இருவரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தனர். பின்னர் மாலை ஆறு மணி அளவில் ஜிரோட்டா என்னும் கிராமம் அருகே மாணவியை சாலையோரம் படுக்க வைத்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
இந்நிலையில் அந்த பக்கமாக வந்த லாரி டிரைவர் ஒருவர் மாணவியின் நிலையை பார்த்து அவரின் தந்தையின் செல்போன் என்னை வாங்கி நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மாணவியின் தந்தை மகளிடம் விசாரித்ததில் அவர் நடந்த கொடுமையை கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தந்தை மருத்துவமனைக்கு அனுமதித்து பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மாணவியை கடத்தி பலாத்காரம் செய்து விட்டு தப்பி சென்ற இரண்டு பேரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.