பாகிஸ்தானின் புது பிரதமராக பொறுப்பேற்று இருக்கும் ஷெபாஸ் ஷெரீப் அரசு ஊழியர்களுக்கான வார விடுமுறையை குறைத்ததுடன், பணி நேரத்தையும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாகிஸ்தானில் இம்ரான்கான் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததை அடுத்து ஷெபாஸ் ஷெரீப் அந்நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கான வார விடுமுறையை 2 நாட்களிலிருந்து ஒரு நாளாக குறைத்து ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் காலை 10 மணிக்கு தொடங்கி வந்த பணிநேரம் இனிமேல் 8 மணிக்கு தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம் அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் 25 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கிடையே பிரதமர் அலுவலக ஊழியர்களிடம் உரையாற்றிய அவர், சேவை பணிபுரிய வந்த நாம் ஒரு நொடியைக்கூட வீணடிக்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.