பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ஒரே நாளில் 30 ரூபாய் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மட்டுமல்லாமல் அனைத்து விதமான எரிபொருட்களின் விலையை பாகிஸ்தான் அரசு நேற்று திடீரென உயர்த்தியது. அனைத்துப் பொருட்கள் மீதும் லிட்டருக்கு 30 ரூபாய் உயர்த்தப்படுவதாக அந்நாட்டு நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். அதன் காரணமாக பெட்ரோல் விலை ரூ.179.86- க்கும், டீசல் ரூ.174.15- க்கும், மண்ணெண்ணெய் விலை ரூ.155.56- க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அரசின் இந்த முடிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இம்ரான்கான் வெளியிட்டுள்ள, இதற்கு முன்பு ஒரே நாளில் இவ்வளவு விலை உயர்வு ஏற்படவில்லை என கூறியுள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.