Categories
உலக செய்திகள்

SHOCK NEWS: மக்களே…. நாடு முழுவதும்… இணையதள சேவைகள் முடக்கம்… காரணம் தெரியுமா…? அதிபரின் அதிரடி முடிவு….!!

கஜகஸ்தானின் அதிபர் அங்கு நடைபெற்று வரும் வன்முறை காரணமாக ஜனவரி 19 ஆம் தேதி வரை அவசர நிலை பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து தற்போது அந்நாடு முழுவதும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.

கஜகஸ்தான் நாட்டின் பிரதமரான அஸ்கர் மாமின் 2022 ஆம் ஆண்டின் புதுவருடப் பிறப்பையொட்டி எரிபொருள் மீதான விலையை உயர்த்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீதியிலிறங்கி போராட ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த போராட்டம் அல்மாட்டி மற்றும் மேற்கு மங்கிஸ்டாவ் மாநிலங்களில் வன்முறையாக மாறியுள்ளது. இதனால் அந்நாட்டின் பிரதமரான அஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இருப்பினும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து வன்முறையை கையாண்டு வந்துள்ளார்கள். ஆகையினால் கஜகஸ்தான் அதிபரான காசிம் வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி வரை அந்நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் உட்பட அனைத்து பகுதிகளிலும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |