நாடு முழுவதும் உள்ள 178 அனல் மின் நிலையங்களில் சுமார் 500 க்கும் மிகவும் குறைவாகவே நிலக்கரி கையிருப்பு உள்ளது. இதனால் நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் மின்சாரம் தேவை அதிகரித்துள்ள நிலையில் போதிய நிலக்கரி கையிருப்பு இல்லாத காரணத்தால் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது,
எனவே மின்சாரக் கட்டணத்தை உயர்த்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் மின்சாரத் தேவையை பெரும்பகுதி அனல் மின் நிலையங்கள் மூலமாகவே நிறைவேற்றப்படுகின்றன. ஏற்கனவே நிலக்கரி தட்டுப்பாடு இருந்த நிலையில் மின் தேவை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.