கடந்த சில நாட்களாக பருத்தி நூல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போது பாலியஸ்டர் நூல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய இரண்டு மாதங்களில் பாலியஸ்டர் நூல் விலை 20 ரூபாய் உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஒரே மாதத்தில் மீண்டும் 20 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தின் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் தையல் தொழில் செய்பவர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு காரணமாக எலாஸ்டிக் உற்பத்தி 40 சதவீதமாக குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலர் விலை உயர்வால், பாலியஸ்டர் நுால் விலை சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் தற்போது ஒரே மாதத்தில், 20 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. ஆர்டர் வழங்கினாலும், போதுமான அளவு பாலியஸ்டர் நுால் கிடைப்பதில்லை.அதனால், எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதித்துள்ளன.