மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டை சலுகை வழங்குவது குறித்து நீண்டகாலமாக தொடர் குழப்பம் நிலவி வருகின்றது. இதில் மத்திய அரசு தலையிடாமல் இருந்தது. இந்த நிலையில் மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் சலுகை தொடர்பாக மத்திய ரயில்வே துறை அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி தற்போது தெரியவந்துள்ளது.
அதன்படி மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகை அளிக்கும் திட்டம் அரசிடம் தற்போது இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். பொதுவாகவே நாட்டின் மூத்த குடிமக்கள் ரயில் கட்டணத்தில் 50 முதல் 55 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சலுகை நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் அனைத்து மூத்த குடிமக்களும் ரயில் கட்டணத்தில் சலுகை எதுவும் இல்லாமல் கூடுதலாக செலவு செய்ய வேண்டிய சூழல் உள்ளது.
கொரோனா காரணமாக இந்த வசதியை இந்திய ரயில்வே ஒத்தி வைத்தது. அதன் பிறகு இந்த திட்டம் முழுமையாக நிறுத்தப்பட்டது. இருந்தாலும் கொரோனா தொற்றுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மூத்த குடிமக்களின் ரயில் பயணங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்ட இந்த விளக்கை மீட்டெடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.