Categories
அரசியல்

SHOCK NEWS: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி…. டிக்கெட் கட்டணம் அதிரடி உயர்வு….!!!!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. டீசல் மூலமாக இயங்கும் ரயில்களில் நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளிடம் இனி அதிக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இந்த கூடுதல் கட்டணம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. டீசல் இன்ஜின் களில் ஓடும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளிடம் ஹைட்ரோகார்பன் சார்ஜ், டீசல் வரி 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விதிக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

டீசல் இன்ஜின் கலையை பயன்படுத்தி குறிப்பிட்ட தூரம் இயக்கப்படும் வயல்களுக்கு இந்த கூடுதல் கட்டணம் பொருந்தும்.டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அதன் சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தும் வகையில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. ரயில் பயணத்தில் ஏசி வகுப்புக்கு 50 ரூபாய், ஸ்லீப்பர் வகுப்புக்கு 25 ரூபாய், பொது வகுப்புக்கு பத்து ரூபாய் என மூன்று பிரிவுகளின் கீழ் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

புறநகர் ரயில் பயண டிக்கெட்டுகளில் இந்த கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது. நிர்ணயிக்கப்பட்ட தூரத்தில் 50% டீசலில் இயங்கும் ரயில்களை அடையாளம் காண வேண்டும் என அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் பட்டியல் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு முன்பு பதிவு செய்யும் டிக்கெட்டுகளுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப் படுவது குறித்து எந்த தகவலும் தற்போது வெளியாகவில்லை. இந்த கட்டண உயர்வால் ரயிலின் ஒட்டுமொத்த டிக்கெட் கட்டணம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடிப்படை கட்டணத்தை உயர்த்தாமல் கூடுதல் கட்டணத்தை சேர்த்தும் சலுகைகளை குறைத்து வாடிக்கையாளர்களுக்கான சிரமங்களை குறைப்பதற்கு ரயில்வே முயற்சி செய்து வருகிறது. ஆனாலும் டிக்கெட் விலை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |