பிரபல பாடகியான லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது (வெண்டிலேட்டர்) எனவும், மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மேலும் மோசமாக இருப்பதாகவும் அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் டாக்டர் பிரதிக் மல்தாணி தெரிவித்துள்ளார். லதா மங்கேஷ்கருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பின் கீழ் லதா மங்கேஷ்கர் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.