Categories
தேசிய செய்திகள்

Shock News: 16 யூடியூப் சேனல்கள் முடக்கம்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால் 16 யூடியூப் சேனல்கள்  அதிரடி  முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

இந்தியா குறித்து தவறான தகவல்களை பரப்பி வரும் யூடியூப் சேனல்களுக்கு எதிராக, இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் 22 யூடியூப் சேனல்களுக்கு அதிரடியாக தடை ஒன்றை விதித்துள்ளது. இதையடுத்து மேலும் 16 யூடியூப் சேனல்களை முடக்கி, இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை தொடர்ந்து, இந்திய சேனல்கள் மட்டுமன்றி, பாகிஸ்தான் சேனல்களும், இதில் இடம் பெற்றுள்ளது.

ஆகவே இந்தியாவை சேர்ந்த 10 யூடியூப் சேனல்கள் மற்றும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் 6 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு  முடக்கி தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஐடி விதிகளின் கீழ், அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே இது குறித்த தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”முடக்கப்பட்டுள்ள யூடியூப் சேனல்கள் மற்றும் பேஸ்புக் கணக்குகள், இந்தியாவில் பீதியை உருவாக்கவும், பிரிவினையை தூண்டவும், பொது ஒழுங்கை சீர்குலைக்கவும் பொய்யான மற்றும்  சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பி வருகின்றன. இவ்வாறு தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-ன் விதி 18-ன் கீழ் தேவைப்படும் தகவல்களை அவர்கள் யாரும் அமைச்சகத்திற்கு வழங்கவில்லை” என்றும்  கூறியுள்ளது.

Categories

Tech |