தமிழகத்தில் செயல்படும் அரசு மதுபான கடைகள் மூலம் வருடத்திற்கு 30 கோடி ரூபாய் வரை அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்கிறது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுபான கடைகளில் 600 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக பண்டிகை காலங்கள் என்றாலே மதுபான கடைகளில் விற்பனை களை கட்டும். இதனால் தான் தீபாவளி பண்டிகையின் போது 600 கோடி ரூபாய்க்கு இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் மாமன்னர் மருது பாண்டியர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் வருகிற 24-ஆம் தேதி வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள மதுபான கடைகள் 23-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 24-ம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மானாமதுரை மற்றும் திருப்புவனம் பகுதிகளில் செயல்படும் மது அருந்து கூடங்களும் அடைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மேலும் இந்த அறிவிப்பால் மது பிரியர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.