Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….‌ மதுபானங்களின் விலை அதிரடி உயர்வு?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழ்நாட்டில் உள்ள மது வகைகளை விற்பனை செய்யும் உரிமையை மாநில வாணிப கழகம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் மொத்த மற்றும் சில்லறை விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்கிறது. தமிழகத்திற்கு மதுபான கடைகளின் மூலம் அதிக அளவில் வருமானம் கிடைக்கிறது. அதன்படி வருடத்திற்கு குறைந்தது 30 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. மதுபான கடைகளில் மது பாட்டில்கள் விற்பனை மூலம் ஆயத்தீர்வை வரி மற்றும் விற்பனை வரி மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் கடந்த 1937-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபான வகைகள், ஒயின் மற்றும் பீர் போன்ற அனைத்து கலால் பொருட்களுக்கும் சிறப்பு கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்படுபட்டதாக அறிவித்துள்ளார்.

இதனால் மதுபான கடைகளில் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மதுபானங்களின் விலை ஒருபுறம் உயர்ந்தாலும் பாட்டில்களின் விலையும் தற்போது உயர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மற்றும் கடந்த மார்ச் மாதங்களில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு குவாட்டருக்கு 10 ரூபாயும், மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு 20 ரூபாயும் உயர்த்தப்பட்டது.

அதன் பிறகு ஆஃப் பாட்டில் சாதாரண மதுபான ரகங்களுக்கு 20 ரூபாயும், மீடியம் மற்றும் உயர்ரக மதுபானங்களுக்கு 40 ரூபாயும், ஃபுல் பாட்டில் சாதாரண ரகங்களுக்கு 40 ரூபாயும், மீடியம், உயர் ரக மதுபானங்களுக்கு 80 ரூபாயும், பீர் வகைகளுக்கு 10 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மதுபானங்களின் விலை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

Categories

Tech |